தப்பி ஓடிய கொரோனா நோயாளி கைது..!!


கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் முல்லேரியா ஐ.டி.எச. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடிய கொரோனா நோயாளி சற்று முன்னதாக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தப்பி ஓடிய கொரோனா நோயாளி கொழும்பு தேசிய மருத்துவமனை வெளிநோயளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லேரியா ஐ.டி.எச். மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று அதுவும் வெளிநோயாளர் பிரிவில் நின்ற போதே கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை அவர் மூலமாக சமூகத்தில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related:

இன்று அதிகாலை முல்லேரியா ஐ.டி.எச். மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய குறித்த கொரோனா தொற்றாளரை கண்டுபிடிக்க விசேட இராணுவ குழுவினர் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் இறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts