சுதந்திர தினக் கொண்டாட்டம் சுகாதார நடைமுறைகளை அறிவித்தது..!!

இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் ஓகஸ்ற் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கொண்டாட்டத்திற்கான சுகாதார வழிகாட்டுதல்களை மத்திய உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் முக்கியமாக, சுதந்திர தினத்தின் போது அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களையும் கௌரவிக்கும் விதமாக கொண்டாட்டங்களை முன்னெடுக்கவும் மத்திய உட்துறை அமைச்சகம் பரிந்துரைந்துள்ளது.

Related posts