உலகளவில் கொவிட்-19 குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 இலட்சத்தை கடந்தது..!!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95 இலட்சத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 95இலட்சத்து 35ஆயிரத்து 641பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், ஒரு கோடியே 56 இலட்சத்து 54 ஆயிரத்து 649பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், உலகளவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 36ஆயிரத்து 479பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடாகவும், உயிரிழப்பை சந்தித்த நாடாகவும் அமெரிக்கா விளங்குகின்றது.

அங்கு, 41இலட்சத்து 69ஆயிரத்து 991பேர் பாதிப்படைந்துள்ளதோடு, ஒரு இலட்சத்து 47ஆயிரத்து 333பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts