பிறப்புச் சான்றிதழில் இனம் தொடர்பில் நீக்க வேண்டாமென மஹிந்த உத்தரவிட்டுள்ளார் என விமல் தெரிவிப்பு..!!

புதிய பிறப்புச் சான்றிதழ்களில் இனம் குறித்து குறிப்பிடப்படுவதை நீக்கும் நடவடிக்கையை உடன் கைவிடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் புதிய பிறப்புச்சான்றிதழ்களில் இனத்தைக் குறிப்பிடாமல் இலங்கையர்கள் என மாத்திரம் குறிப்பிடவுள்ளது என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

விண்ணப்பப்படிவத்திலும் இனம் குறித்த கேள்விகள் நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, நேற்று தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய விமல் வீரவன்ச இதனைக் கடுமையாக எதிர்த்திருந்தார்.

தற்போதைய அரசு இதற்கு ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts