பாதுகாப்பு படைகளை நகரங்களுக்குள் அனுப்ப ட்ரம்ப் உத்தரவு..!!

சிகாகோ உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியால் நடத்தப்படும் நகரங்களுக்குள், நூற்றுக்கணக்கான கூட்டாட்சி பாதுகாப்பு படைகளை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வன்முறைக் குற்றங்களை எதிர்ப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய ட்ரம்ப், ‘வெளிப்படையாக, எங்களுக்கு வேறு வழியில்லை. டி.இ.ஏ, ஏ.ரி.எஃப் அமெரிக்க மார்ஷல்ஸ் சேவை, உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் எஃப்.பி.ஐ ஆகியவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான படைகளை நீதித்துறை நகரத்திற்கு அனுப்பும்’ என கூறினார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் மிசூரியின் கன்சாஸ் நகரில் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் லெஜண்ட்’ என்று அழைக்கப்படும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது என்று ட்ரம்ப் கூறினார். நியூ மெக்ஸிகோவின் அல்புகர்கிக்கு படைகள் அனுப்பப்படும்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, சிவில் உரிமைகள் கண்காணிப்புக் குழுக்களிடமிருந்து கண்டனத்தைத் பெற்றுள்ளது.

மினசோட்டாவின் மினியாபோலிஸில் பொலிஸ் அதிகாரிகள் பிடியில், நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட், கடந்த மே மாதம் 25ஆம் திகதி உயிரிழந்ததிலிருந்து அமெரிக்க நகரங்களில் ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதன்போது அடிக்கடி வன்முறை சம்பவங்களும் பதிவாகின்றன.

இதற்கிடையில், நியூயோர்க் நகரம், பிலடெல்பியா, லொஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ மற்றும் மில்வாக்கி உள்ளிட்ட பெருநகரங்களில் துப்பாக்கி வன்முறை அதிகரித்துள்ளது.

Related posts