பாதாள உலகக் குழு உறுப்பினர் அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை..!!

இலங்கையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்கா இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வௌயாகியுள்ளது.

அங்கொட லொக்காவுடன் இந்தியாவில் வசித்துவந்த முல்லேரியா ரஹ்மான் என்பவரின் மனைவி அங்கொட லொக்காவின் உணவில் விசத்தை கலந்ததாகவும் அந்த உணவை உட்கொண்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கையில் சிறையில் உள்ள லொக்காவின் எதிரிகளும் வெளிநாடுகளில் இருப்பவர்களும் இந்த திட்டத்தை தீட்டியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts