நாளைய தினம் விசாரணை..!!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி பிரதீப் அனுறுத்த சம்போயோ தாக்கல் செய்த மனுவை நாளைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்ளவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ எச் எம் டி நவாஸ் மற்றும் சோபித ராஜகறுன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளைய தினம் மாலை 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தன்னை கைது செய்வதனை தவிர்க்கும்படி இவ்வாறு  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

நீர்கொழும்பு முன்னாள் சிறைச்சாலை அதிகாரி உட்பட 4 பேரை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய  தினம் பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts