திரிஷாவை திருமணம் செய்யும் நடிகர் சிம்பு..!!

நடிகை திரிஷாவை சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூகவலைத்தளத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

பாகுபலி நடிகர் ராணா டகுபதியும் திரிஷாவும் காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர்.

பின்னர், தொழிலதிபர் வருண் மணியன் உடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற திரிஷாவின் திருமண கனவு சில பல காரணங்களுக்காக பிரேக்கப் ஆனது. இப்படி பல முறை திரிஷாவுக்கும் திருமணம் கை கூடவே இல்லை.

இதேவேளை, திரிஷா இந்த லாக்டவுனில் சிம்புவுடன் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் ரகசியமாக திருமணம் ஆகி விட்டது, விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என பலவிதமான தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன.

இந்நிலையில், சிம்பு திரிஷா திருமண செய்தி உண்மையா? அல்லது வதந்தியா என்பதை அவர்கள் தரப்பு விளக்கம் அளிக்கும் என்றும், இதுவும் ஒரு லாக்டவுன் போரிங் வதந்தி தான் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இது குறித்து சிம்புவின் பெற்றோர் விளக்கமளித்துள்ளனர்.

இதுகுறித்து சிம்புவின் பெற்றோர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த மாதம் கூட லண்டனில் உள்ள கோடீஸ்வர பெண்ணை சிம்பு திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியானது. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத்தன்மை அற்றவை என்று அதிரடியாக கூறியுள்ளனர்.

Related posts