கொழும்புக்கு அழைக்கப்படவுள்ள அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகள்..!!

எதிர்வரும் 26 ஆம் திகதி அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளனர்.

பொதுத் தேர்தல் தொடர்பான இறுதிக் கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தெரிவித்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, தேர்தலை நடத்துவது தொடர்பில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு இதன்போது மீண்டும் அறிவுறுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவிக்கு வருவதற்கு தான் தயங்கப்போவதில்லை என அதன் உப தலைவரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

லுணகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts