கொரோனாவைக் கட்டுப்படுத்த சீனா உள்ளிட்ட எவருடனும் இணைந்து செயற்படத் தாயார் -ட்ரம்ப்..!!

வெற்றிகரமான கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதலில் தயாரித்தால் சீனா உட்பட யாருடனும் இணைந்து பணியாற்றத் தனது நிர்வாகம் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனா கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை வெற்றிகரமாக கண்டுபிடித்தால் அந்த நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாரா? என நேற்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவா் இவ்வாறு கூறினார்.

ஒரு நல்ல முடிவைப் பெறப் போகும் யாருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என அவா் தெரிவித்தார் .

கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆய்வில் அமெரிக்கா முன்னேறியுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஒரு சாத்தியமான தடுப்பூசி எதிர்பார்த்ததை விட மிக விரைவில் வரும். உடனடியாக அது சிகிச்சைக்காக விநியோகிக்கப்படும் என்றும் அவா் நம்பிக்கை வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் கடந்த டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் பரவியது. ஆரம்பத்தில் வைரஸ் பரவலை சீனா மறைத்துவிட்டதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. உலக சுகாதார அமைப்பில் சீனாவின் செல்வாக்குக் காரணமாக இது குறித்து ஏனைய உலக நாடுகள் முன்னதாகவே விழிப்பூட்டப்படவில்லை எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts