பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கைது..!!

எல்பிட்டிய  கனேகொட பகுதியில் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதன்போது, அவரிடமிருந்து போர் 12 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் ஆறு ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் ரீ – 56  துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 23 ரவைகளும் மூன்று வாள்களும், இராணுவ சீருடைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.rn rnகைது செய்யப்பட்டவர் கனேகொடை பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.rn rnகுறித்த சந்தேகத்திற்குரியவரை மேலதிக விசாரணைக்காக  எல்பிட்டி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள் நிலையில் அவரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

Related posts