துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது..!!

ஹொரன – இலிப பிரதேசத்தில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் கொலை தொடர்பிலான  பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts