தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை..!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்த வெளியிட்ட ஜனாதிபதி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக ஆய்வு செய்து தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நுவரெலியாவிலும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் பாட இணைச் செயற்பாடுகளில் நிலவுகின்ற குறைபாடுகள் பற்றி மாணவர்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு திட்டமிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, சிறுபான்மையினரின் இறுப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என அதன் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts