இரவு ஊரடங்கு உத்தரவு- ஈத் காலத்திற்கு பயண தடைகளை அமுல்படுத்தும் ஓமான்..!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதைத் தடுக்க, இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் ஈத் காலத்திற்கு பயண தடைகளை அமுல்படுத்த ஓமான் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜூலை 25ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களுக்கும் இடையிலான பயணத்தை ஓமான் தடை செய்துள்ளது.

அத்துடன், வளைகுடா அரசு தினமும் இரவு 7 மணிக்கு இரவு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும். அதே காலகட்டத்தில் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் இதில் ஈத் அல்-ஆதாவின் முஸ்லீம் விடுமுறை அடங்கும்.

ஊரடங்கு உத்தரவின் போது கடைகள் மற்றும் பொது இடங்கள் மூடப்படும் என மாநில செய்தி நிறுவனமான ஒ.என்.ஏ தெரிவித்துள்ளது.

ஓமானில் இதுவரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால், 69,887பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 337பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts