13 உத்தியோகத்தர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்..!!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 13 உத்தியோகத்தர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில் சிலர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி, அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட போதைப்பொருளை தங்களின் வீடுகளிலும் சொகுசு வாகனங்களிலும் மிக சூட்சுமமாக மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக துப்பாக்கிகளையும் விற்பனை செய்துள்ளதாகவும், விசாரணைகள் மூலம் துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் சார்பில் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts