100 சாரதிகள் கைது – 100 வாகனங்களும் காவல் துறையினர் வசம்..!!

மது போதையில் வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 9.00 மணிமுதல் இன்று அதிகாலை 04.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 100 வாகனங்களும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி காவல் துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 90 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts