விமல் வீரவன்சவின் மனைவியை கைதுசெய்யுமாறு உத்தரவு..!!

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவைக் கைதுசெய்வதற்கான பிடியாணையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

போலியான ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை மோசடியாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை தொடர்பிலேயே சஷி வீரவன்சவுக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபரான சஷி வீரவன்ச மன்றில் முன்னிலையாகவில்லை. இதையடுத்து நீதிவான் இந்த உத்தரவை வழங்கினார்.

Related posts