சீனப் பொருட்களுக்குப் பதிலாக வேறு நாடுகளில் கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானம்..!!

சீனத் தயாரிப்புகளை கொள்வனவு செய்தலை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய மின் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.சுக் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் காலங்களில் சீனப் பொருட்களுக்குப் பதிலாக ஜப்பான், தைவான், கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து மின் உபகரணங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் மென்பொருட்களை ரஷ்யா, செக் குடியரசு அல்லது போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வேறு நாடுகளில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதால் செலவு நிலை ஏற்பட்ட போதும் சீனத் தயாரிப்புகளை கொள்வனவு செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக இந்திய மின் மற்றும் மின்னணுவியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.சுக் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான மோதல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உள்நாட்டு உற்பத்தி என்ற அழைப்பினைத் தொடர்ந்து இந்திய மின்சார உபகரணங்கள் உற்பத்தி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் சீனாவுக்கு வழங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts