சட்ட அமுலாக்க அதிகாரிகளை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை..!!

அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த கூட்டாட்சி சட்ட அமுலாக்க அதிகாரிகளை (Federal Law Enforcement Officers) அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய நகரங்களான சிகாகோ மற்றும் நியூயோர்க் உட்பட பல நகரங்களில் தாராளவாத ஜனநாயகவாதிகளால் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதனைக் கட்டுப்படத்த இந்த வழிமுறையை கையாளவுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஓரிகனுக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகள் போர்ட்லான்டில் இடம்பெற்ற தொடர் போராட்டங்களை கட்டுப்படுத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ள போதும் கூட்டாட்சி அதிகாரிகள் பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறார்கள் என உள்ளூர் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, தேர்தல் காலத்தில் இவ்வாறு பிரச்சினை மோசமாக்கப்பட்டுள்ளதாகவும் போர்ட்லான்டிலிருந்து கூட்டாட்சி பணியாளர்களை நீக்குமாறும் மாநிலத் தலைவர்கள் கோரியுள்ளனர்.

இவ்வாறிருக்கையில், போர்ட்லான்ட் போராட்டக்காரர்கள் மீது ட்ரம்பின் ஒடுக்குமுறை குறித்தும் கூட்டாட்சி சக்திகளை அனுப்ப அவருக்கு உரிமை உள்ளதா என்பது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தனக்கு அதிகாரம் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts