அடுத்த வருடத்துக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என 100 வீத நம்பிக்கை இல்லை..!!

அடுத்த ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்ற 100 வீத நம்பிக்கை தனக்கு இல்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்து முயற்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்கான கால வரையறையை உறுதியாகக் கூற முடியாது. அதுவரை கொரோனாவில் இருந்து விடுபட சமூக இடைவெளியேற நம்பியிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கென்டில் உள்ள ஒரு பாடசாலைக்கு நேற்று விஜயம் செய்து அங்கு கருத்து வெளியிட்ட போரிஸ் ஜோன்சன், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு தடுப்பூசி கிடைக்கும் என்று நான் 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருந்ததாகத் தெரிவித்தார். எனினும் அது அடுத்த வருடத்துக்குள் கிடைக்குமா? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நம்பகமான தடுப்பூசி கிடைக்கும்வரை சமூக இடைவெளி பேணுதல், கைகளைக் கழுவுதல், முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிகாட்டல்களை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பிரதாமர் ஜோன்சன் கூறினார்.

பிரிட்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்களின் உடலில் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, கொரோனா வைரஸூக்கு எதிரான நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது என அதன் முதல் சுற்று மனிதப் பரிசோதனையின் முடிவில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளமை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த கொரோனா தடுப்பூசியை பொதுப் பாவனைக்கு அறிமுகப்படுத்த முன்பு இன்னும் நிறைய பணிகள் உள்ளன என ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts