பிரான்ஸில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த நடைமுறையில், முக்கியமாக பல்பொருள் அங்காடிகள், வேலைத்தளங்கள், பொதுமக்களை உள்வாங்கும் இடங்கள் போன்ற அனைத்திலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

கூட்டம் மற்றும் செயற்திறன் அரங்குகள், சினிமாக்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், விளையாட்டு அறைகள், கல்வி மையங்கள், விடுமுறை மையங்கள், நூலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், உட்புற விளையாட்டு இடங்கள், அருங்காட்சியகங்கள், நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், கடைகள், வணிக மையங்கள், நிர்வாகங்கள், வங்கிகள் மற்றும் மூடப்பட்ட சந்தைகள் ஆகியவையும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின், இரண்டாவது அலையை தடுக்கும் ஒரு முன்னோட்ட தடுப்பு நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகின்றது.

தொற்று பரவல் வீதமே சுகாதார அதிகாரிகள் நாடு தழுவிய முகக்கவசம் அணியும் கட்டாய கொள்கையை செயற்படுத்துவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

வைரஸ் (இரத்தம்) பரிசோதனையின் மூலம் கொவிட்-19க்கு நேர்மறையானதை பரிசோதிக்கும் ஒவ்வொரு நோயாளிக்கும் மற்றொரு நபரைத் தாக்கும் திறன் உள்ளது. அந்த வீதம் இப்போது நாட்டில் 1.2 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அதிகாரிகளைப் பொறுத்தவரை இது வைரஸின் சுழற்சியை அதிகரிக்கிறது.

கடந்த 14ஆம் திகதி தேசிய தின உரையில், கட்டாய முகக் கவச உத்தரவு அடுத்த மாதம் 1ஆம் திகதியிலிருந்துதான் அமுலுக்கு வரும் என்று ஜனாதிபதி இமானவல் மேக்ரான் அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் இதனை விரைவுப்படுத்தினார்.

இந்த எச்சரிக்கைகள், பிரான்ஸின் அரசு கொரோனாத் தொற்று மீண்டும் ஆரம்பித்திருப்பதை நிரூபிப்பதாகவே உள்ளது. இதனிடையே லார் பிராந்தியத்தின் மேயேன் பகுதியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் திடீரென தீவிரமெடுத்துள்ளது.

Related posts