பாடசாலைகளை மீளத் திறக்க ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானம்..!!

அனைத்து பாடசாலைகளையும் ஒகஸ்ட் மாதம் மீண்டும் திறப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஸ்கொட்லாந்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்கொட்லாந்து அரசாங்கம் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கமைய ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலை மாணவர்கள் சமூக இடைவெளியைப் பேணவேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாடசாலை ஊழியர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் 2 மீற்றர் சமூக இடைவெளியைப் கடைபிடிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ஆசிரியர்கள் மாணவர்களுடன் நெருங்கி தொடர்புகொள்ளும் போது  பாதுகாப்பு முகக் கவசங்களை அணிய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில்  ஒன்றுகூடல்களை மேற்கொள்ளல், உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது  மற்றும் கலை நிகழ்வுகளை நடாத்துவது போன்றவை ஆபத்தானது என ஸ்கொட்லாந்து அரசாங்கம் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

Related posts