கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு..!!

சர்வதேச ரீதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாத்திரம்  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2 இலட்சத்து 40 ஆயிரத்து 403 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது  பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலேயே அதிகளவானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை   உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனை கடந்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 மில்லியனை கடந்துள்ளது.

அதேபோன்று பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று மாத்திரம் ஆயிரத்து 110 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2 மில்லியனை கடந்துள்ளது.

Related posts