அமெரிக்காவில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்படாது – ட்ரம்ப்..!!

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக  அமெரிக்காவில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  இதுதொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

முகக்கவசம் அணிதல் கட்டாயம் என தொற்று நோய் நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறான ஒரு கருத்தினை முன்வைத்துள்ளார்.

எனினும் கடந்த சில தினங்களாக ட்ரம்ப் பங்கேற்கும் நிகழ்வுகளில் முகக்கவசம் அணிந்தவாறே பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவில் நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 74 ஆயிரத்து 987 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 946 பேர் நேற்று மாத்திரம் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நேற்று வரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் 37 இலட்சத்து 70 ஆயிரத்து 12 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts