பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு ..!!

லடாக்கின் லே எல்லைப் பகுதியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்துள்ளார்.

லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு 2நாட்கள்> உத்தியோகப்பூர்வ விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

அதன் முதற்கட்டமாக இன்று காலை லடாக்கின் லே பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, முப்படையினர் கௌரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இராணுவ தளபதி மனோஜ் நரவானே ஆகியோருடன், ஸ்டக்னா என்ற முன்களப் பகுதிக்கு அவர்  சென்றுள்ளார்.

பின்னர் அவர்களிடம், எல்லையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், ரோந்து ஹெலிகாப்டர்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

மேலும் எல்லையில் கண்காணிப்புக்காக ரோந்து பணியில் பயன்படுத்தப்படும், ஹெலிகாப்டர்களையும் அவர் பார்வையிட்டார்.

அந்தவகையில் இன்றையத் தினம், லடாக்கில் ஆய்வை முடித்துக் கொண்டு ஜம்மு-காஷ்மீரிலும் எல்லை நிலைவரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ,நாளை ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts