அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

சர்வதேச ரீதியில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது நேற்றைய தினம் 32 ஆயிரத்து 696 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய, இந்தியாவில் இதுவரையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 5 ஆயிரத்து 531 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று 600 இற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 619 ஆக உயர்வடைந்துள்ளது. இதேநேரம், 6 இலட்சத்து 36 ஆயிரத்து 567 பேர் குணமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. திருப்பதி ஆலயத்தில் கடந்த ஜூன் மாதம்  11 ஆம் திகதி முதல் இதுவரையில் 140 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுறுதியாகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அவர்களில் உதவி பூசகர்கள் 14 பேருக்கும், பாதுகாப்பு பணியாளர்கள் 56 பேருக்கும், லட்டு தயாரிப்பில் ஈடுபட்ட 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக  திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அங்கு கொவிட்-19 தொற்றுறுதியான 140 பேரில் 70 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை, 10.3 பில்லியன் டொலர் நிதி கோரிக்கையை விடுத்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய நிதி திரட்டுவதற்கான அழைப்பு இதுவாகும்.கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 265 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த நிலையில், குறித்த நிதியானது குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கும், பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் கொவிட்-19 காரணமாக அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அமெரிக்காவில், 36 இலட்சத்து 95 ஆயிரத்து 25 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. 20 இலட்சத்து 14 ஆயிரத்து 738 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 76 ஆயிரத்து 822 பேர் உயிரிழந்துள்ளனர் இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 39 லட்சத்து 52 ஆயிரத்து 123 ஆக உயர்வடைந்துள்ளது.அத்துடன் சர்வதேச ரீதியில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 745 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும் தொற்றுறுதியான 82 லட்சத்து 84 ஆயிரத்து 261 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

Related posts