முதலைக்கு பலியாகிய மூன்றரை வயது சிறுமி..!!

மீகலேவ யாய வாவியில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சிறுமி தனது தாயாருடன் நேற்றைய தினம் (15) மாலை நீராடுவதற்கு சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசவாசிகள் இணைந்து முதலையிடமிருந்து சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

உஸ்கல சியம்பலாகமுவயைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமியே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Related posts