துறைமுக தீவிபத்து குறித்து ஈரான் அதிகாரிகள் விசாரணை..!!

பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் தென்மேற்கு துறைமுகமான புஷெஹரில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து குறித்து, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட இந்த பாரிய தீவிபத்தில், குறைந்தது ஏழு கப்பல்கள் தீக்கிரையாகியதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையத்தை குறிவைத்து சந்தேகங்களை எழுப்பிய தீ மற்றும் வெடிப்புகளின் தொடர்ச்சியான சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போது தெற்கு துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பல் கட்டடத்தில் கருப்பு புகை காற்றில் பறப்பதைக் காட்டும் புகைப்படத்தை அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டது.

எனினும், இந்த தீவிபத்தின் போது, எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு வெடிப்புகள் தலைநகரான தெஹ்ரானை ஜூன் பிற்பகுதியில் உலுக்கியது. ஒன்று இராணுவ தளத்திற்கு அருகிலும் மற்றொன்று சுகாதார மையத்திலும் ஏற்பட்டது. இதில் 19பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 2ஆம் திகதி ஈரானின் நிலத்தடி நடான்ஸ் அணுசக்தி நிலையத்திலும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Related posts