அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும்..!!

தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என சஜித் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அனைவரும் நன்கு அறிவார்கள்.

 சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமைய அரசாங்கம் தீர்மானங்களை  முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதை அரசாங்கம் கைவிட வேண்டும்.  தற்போதைய காலகட்டத்திலும் அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. எவ்வாறாயினும் தேர்தலை மிக விரைவாக  நடாத்த வேண்டும்  என்பதே அரசாங்கத்தின் தற்போதைய தேவையாக உள்ளது என்பதை நான் இங்கு ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts