15 பேர் கைது..!!

களுத்துறை சிறைச்சாலைக்கு வெளியே பொருட்களை எறிய முற்பட்ட 15 பேர் வடக்கு களுத்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் சிறைச்சாலை சுவர் மீதேறி கைதிகளுக்கு பல வகையான பொருட்களை வழங்க முற்பட்டுள்ளதாக காவற்துறையினர் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர்கள் வசமிருந்த 12.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 19 புகையிலைகள், 2 கையடக்க தொலைபேசிகள், 6 சிம் அட்டைகள் என்பனவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைதானவர்கள் பல வருடகாலமாக குறித்த செயற்பாட்டை மேற்கொண்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts