பிரேசிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு..!!

பிரேசிலில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் அங்கு 43 ஆயிரத்து 245 கொரோனா தொற்றாளர்கள் பாதிவாகியுள்ளனர்.

அத்துடன், அங்கு நேற்று மாத்திரம் ஆயிரத்து 341 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்கு 12 இலட்சத்து 13 ஆயிரத்து 512 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

இதேவேளை, பிரேசிலில் இதுவரையில் 19 இலட்சத்து 31 ஆயிரத்து 204 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 74 ஆயிரத்து 262 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts