தொடர்ந்தும் வாய்ப்புக்கள்..!!

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் ஜோஸ் பட்லருக்கு தொடர்ந்தும் வாய்ப்புக்கள் வழங்கப்படும் என அதன் தலைமை  பயிற்றுவிப்பாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜோஸ் பட்லர் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. அத்துடன் இறுதியாக விளையாடிய 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரை சதத்தை ஏனும் பெறவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஜோஸ் பட்லருக்கு தொடர்ந்து வாய்ப்புகள்  வழங்கப்படும் என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்; தெரிவித்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணி தலைவர் ஜோசன் ஹோல்டர் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

துடுப்பாட்ட வீரர் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும் இந்திய அணி தலைவர் விராட் கோலி 2-வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் லபுஸ்சேன் 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கம்மின்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.

ஜோசன் ஹோல்டர் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். 

Related posts