தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்..!!

மதுரை மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தளர்வுகள் அற்ற ஊரடங்கு 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக வருவாய் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்யமிஸ்ரா, மதுரை மாவட்ட ஆட்சியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று முதல் ஊரகப்பகுதிகளில் சிறிய கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் பொது மக்கள் வழிபாட்டுக்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழிபாட்டின்போது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதுடன் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் அனைத்து தொழிற்சாலைகளும் நுாறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த சேவை நிறுவனங்கள், 100 சதவீத பணியாளர்களுடன் செயற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம், 20 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வணிக வளாகம் தவிர்த்து, நகைக்கடைகள், புடவைக்கடைகள் போன்றவை 50 சதவீத பணியாளர்களுடன் செயற்படலாம் என்றும் ஹோட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் போன்றவை, காலை 6:00 மணியிலிருந்து இரவு 8:00 வரை செயற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts