ஜனாதிபதியினை சந்தித்த கடற்படை தளபதி..!!

இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் கடற்படை தலைமையகத்தில் இன்று காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தளபதியாக நியமிக்க முன்னர் கடற்படை தலைமை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதியினால் பரிசு ஒன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts