சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் சட்டத்துக்கு புறம்பானது..!!

தென்சீன கடல் பிராந்தியத்தின் வளங்களை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் சட்டத்துக்கு புறம்பானது என அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ குற்றம் சுமத்தியுள்ளார்.சர்ச்சைக்குரிய கடல் பிராந்தியம் தொடர்பாக ஏனைய நாடுகளை சீனா அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.இவ்வாறான நிலையில், தென் சீன கடல் பிராந்தியத்தில், சமுத்திர சாம்ராஜ்சியத்தை கட்டியெழுப்ப சீனாவுக்கு இடமளிக்க கூடாது என்றும் அமெரிக்க இராஜாங்க செயலர் தெரிவித்துள்ளார்.எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் கருத்திற்கு பதிலளித்துள்ள சீனா,  உண்மைகளையும், சர்வதேச சட்டத்தையும் அமெரிக்கா திரிபுபடுத்துவதாக குற்றம் சுமத்தியுள்ளது.தென்சீன கடல் பிராந்தியத்தில் சீனா உரிமைக்கோரும் சர்ச்சைக்குரிய தீவுகள் உள்ள பகுதிகளில் கனிய எண்ணெய் உள்ளிட்ட வளங்கள் நிறைந்துள்ளதாக நம்பப்படுகிறது

Related posts