குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை..!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 13 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,001 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,665 ஆக உள்ள நிலையில் தற்போது 653 பேர் மட்டும் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளனர்.

அத்தோடு கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் 102 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts