அரசாங்கம் மக்களை வறுமையை நோக்கித் தள்ளுகிறது ..!!

தற்போதைய அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேறுவதற்கு பதிலாக அவர்களை வறுமையை நோக்கித் தள்ள முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

ரம்புக்கன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள அவர், பொதுத் தேர்தலுக்கு பின்னர் மக்களுக்கான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் செய்ததைப் போலவே மக்களை ஏமாற்ற இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது என குறிப்பிட்ட அவர் அவர்களின் நடவடிக்கைகள் பொதுமக்களை வறுமைக்கு தள்ளுவதாகும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களின் அண்ணியுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பலமிக்க அரசாங்கத்தை அமைக்கும் என்றும் கிராமங்களையும் நகரங்களையும் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts