ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்து..!!

சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்திய –  சீன இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான நான்காம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று (திங்கட்கிழமை) சூசல் எல்லைப் பகுதியில் 12 மணி வரையில் நீடித்தது.

இதன்போதே, சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

8 மலைச்சிகரங்கள் கொண்ட ஃபிங்கர் பகுதியில் படைகளைக் குறைப்பதுதான் இந்திய சீனா இடையே மிகவும் சிக்கலான பிரச்சினையாக உள்ளது.

கடந்த முறை நடத்தப்பட்ட பேச்சுகளை அடுத்து கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டமைக் குறித்தும் இராணுவ உயர் அதிகாரிகள் இதன்போது ஆய்வு செய்தனர்.

ஆயுதங்கள், படைகளை படிப்படியாக எல்லையில் இருந்து விலக்குவது குறித்தும் இருநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் இதன்போது ஆராய்ந்தனர்.

எல்லையில் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இருநாட்டு இராணுவத்தினரும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதற்கான சூழலை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு 12 மணி வரை நீடித்தது. மிகவும் சிக்கலான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதால் நேரம் நீடித்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Related posts