அமெரிக்காவின் – நியூ மெக்ஸிகோவில் உள்ள ஹோலோமன் விமானப்படை தளத்தில் 49 ஆவது பிரிவைச் சேர்ந்த ‘F-16C Viper என்ற போர் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளான நிலையில் அதனை இயக்கிய விமானி பாதுகாப்பாக சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டின் மே மாதத்திலிருந்து அமெரிக்காவில் இடம்பெற்ற ஐந்தாவது ஜெட் விமான விபத்து இதுவாகும்.
முன்னதாக ஜூலை மாதம் முதலாம் திகதி தென் கரோலினாவில் இதுபோன்ற ‘F-16C Viper ரக போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில் விமானpயான டேவிட் ஷெமிட்ஸ் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய அமெரிக்காவில் நடப்பு மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.