வழக்குத் தொடர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்..!!

தமது கட்சிக்கு அபகீர்த்திக்கு ஏற்படுத்துவதாக தெரிவித்து, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி பந்துல வெல்லால இதனைத் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பேரில் இந்தத் தீர்மானம் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலி சிறிசேனவுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின், அது தொடர்பாக அமைதிகாக்க முடியாது. எனவே, குறித்த விடயம் தொடர்பாக சட்டத்தரணிகள் குழு ஆராயந்துள்ளதுடன், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தொடர்வதற்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சட்டத்தரணி பந்துல வெல்லால தெரிவித்துள்ளார்.

Related posts