கொவிட்-19: பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்தது..!!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, இரண்டு இலட்சத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ விபரங்களின்படி, இதுவரை இரண்டு இலட்சத்து 99ஆயிரத்து 436பேர் பாதிப்படைந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை ஒன்பது ஆயிரத்து 139பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணித்தியலாத்தில் 5பேர் உயிரிழந்ததோடு, 486பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

இதுதவிர, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு ஆயிரத்து 197பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 264பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், இதுவரை ஒரு இலட்சத்து 85ஆயிரத்து 100பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts