இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்..!!

அக்கரப்பத்தனை பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் அக்ரப்பத்தனை காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது வாகனத்தின் மீது மலையக மக்கள் முன்னணியின்; ஆதரவாளர்களே தாக்குதல் நடத்தியிருந்த போதும் தற்போது இதனை அவர்கள் திரிபப்படுத்தியுள்ளதாக நுவரெலிய மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் அனுஷா சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.இதுதொடர்பில் மலைய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் லோரன்சை தொடர்பு கொண்டு வினவிய போது, தமது ஆதரவாளர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாடு பிரிவில் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related posts