இன்று முதல் ஊரடங்கு அமுல்..!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் பெங்களுரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஜுலை 22 ஆம் திகதிவரை  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவு காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை அமுலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து  அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கான கடைகள் காலை 5 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான வெளிமாநிலத்தவர்கள் நேற்றே சொந்த ஊர் திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளதுடன் அங்கு மொத்தமாக 41ஆயிரத்து  581 பேர் வைரஸ் தொற்றுக்கு இலகை்காகியுள்ளதுடன்,  759 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றுள் அதிகளவான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மாநிலமாக பெங்களுர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன்,   அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை புனேயிலும்  இன்று முதல் பத்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி புனே பிம்ப்ரி – சின்ச்வாடு உள்ளிட்ட பகுதிகளில் 14 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts