அவசரகால நிலை ஓகஸ்ட் வரையில் நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தென்னாபிரிக்காவில் அமுலில் இருந்த பேரிடா் அவசரகால நிலை ஓகஸ்ட் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோஸா, நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் தினமும் சராசரியாக 12,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது. எனவே, பேரிடா் அவசரகால நிலை ஓகஸ்ட் 15 வரை நீடிக்கப்படுகிறது.

இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது முடக்கம் அமுலில் இருக்கும். மதுபானங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் மக்கள் பொறுப்பின்றி நடந்துகொள்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தென்னாபிரிக்காவில் 2 இலட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேநேரம், 4,172 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 241 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பதுடன், ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 383 பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts