அமைச்சரவைக் கூட்டம் இன்று..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தின்போது  கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள்,  பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் இருப்பின் அவை தொடர்பாகவும் கலந்தாலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த பொதுமுடக்கத்தை மேலும் நீடிப்பதா என்பது தொடர்பிலும் விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts