அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 646 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 29 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் இருவர் மாலைதீவிலிருந்து நாட்டுக்கு வந்தவர்கள் என்பதுடன், இராஜாங்கனையை சேர்ந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.

ஏனையோரில் சேனபுர தனிமைப்படுத்தல் நிலையத்தில் 11 பேர் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 14 பேரும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்றிலிருந்து  இதுவரை ஆயிரத்து 981 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 654 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 112 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts