10 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம்-வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து 124.750 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்களை காவல்துறையினர் நேற்றிரவு (12) கைது செய்யப்பட்டனர்.

வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் பத்து மில்லியனுக்கும் அதிகமென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவரும் நாளைய தினம் யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts