ஸ்டைரியன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்..!!

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் முதலாவது சுற்றான ஸ்டைரியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சுற்றான ஸ்டைரியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, நேற்று ரெட்புல் ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 306.452 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹாமில்டன் பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 22 நிமிடங்கள் 50.683 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மெர்சிடஸ் பென்ஸ் அணியின் இன்னொரு வீரரான வால்டெரி போட்டாஸ், 13.719 வினாடிகள் மட்டுமே பின்தங்கிய நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, 33.698 வினாடிகள் பின்தங்கிய நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்த ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்;, 15 புள்ளிகளை பெற்றுக்கொண்டார்.

நடப்பு ஆண்டு பர்முயுலா-1 கார்பந்தயத்தின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, 43 புள்ளிகளுடன் வால்டெரி போட்டாஸ் முதலிடத்திலும், லீவிஸ் ஹாமில்டன் 37 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லெண்டோ நோரிஸ் 26 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் மூன்றாவது சுற்றான ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 19ஆம் திகதி ஹங்கரோறிங் ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related posts