மே.இந்திய தீவுகள் அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து தமது முதலாவது இன்னிங்சில் 204 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 318 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்தநிலையில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்களையும் இழந்து 313 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் Zak Crawley 76 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் Shannon Gabriel 5 விக்கட்களை வீழ்த்தினார்

தொடர்ந்து 200 ஓட்டங்களை என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் Jermaine blackwood 95 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் jofra Archer 3 விக்கட்களை வீழ்த்தினார்.

Related posts