மதுசார விற்பனைக்கு தடை..!!

தென்னாப்பிரிக்கா மதுசாரம் விற்பனை தடை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொவிட்-19 தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுலாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு இரவு வேளைகளில் உரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது,

அற்ககோல் பாவனை தென்னாப்பிரிக்காவின் சுகாதார துறைக்கு பாரிய அழுத்தமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சத்து 23 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியான 75 லட்சத்து 73 ஆயிரத்து 589 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts